நம் மனம் இயற்கையுடன் ஒன்றி போகும் அளவுக்கு வழி நெடுகே வயல்கள் ,கிராமத்து சூழல்கள் நிறைந்த பகுதி . 1000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி எசாலம் , பிரம்மதேசம் , எண்ணாயிரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது ‘ஸ்ரீ ராஜராஜ சதுர்வேதி மங்கலம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது . இந்த மூன்று இடங்களிலும் சோழர்களது கோயில்கள் உள்ளன .
நாம் இப்போது எசாலம் ராமநாத ஈஸ்வரர் கோயிலை பற்றி பாப்போம் . இக்கோயிலானது ஊரின் நடுவிலேயே இருக்கிறது .