Showing posts with label siva. Show all posts
Showing posts with label siva. Show all posts

Koil(chidambaram)


சிதம்பர ரகசியம்

தொகு

இச்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில், அங்குள்ள திரை அகற்றபட்டு தீபாராதனை காட்டபடும். அங்கு திருவுருவம் இல்லாது, தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடபட்டிருக்கும்.இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான்.ஆகாயத்துக்கு ஆரம்பமும் ,முடிவும் கிடையாது ,அதை உணரத்தான் முடியும் என்பதை உணர்த்துவதேயாகும்.


நடராசர் கோயில் (Nataraja Temple, Chidambaram) அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவேரி வடகரை சிவத்தலங்கள் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் அனைத்துத் திருமுறைகளிலும் பாடப்பெற்ற தலம் எனும் பெருமையைக் கொண்டது. இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. திருமுறைகள் பாடுவதற்கு முன்பும், பின்னும், சிவவழிபாடு செய்வதற்கு முன்பும், பின்னும் சைவர்கள் சொல்லும் திருச்சிற்றம்பலம் எனும் சொல் இந்த தலத்தையே குறிக்கும். அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலத்தை தரிசனம் செய்தால் முக்தி என்பது சைவர்களின் நம்பிக்கையாகும். இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் என்னும் நகரில் அமைந்துள்ளது.


இத்தலத்தின் மூலவர் : திருமூலநாதர், (தூய தமிழில் : பொன்னம்பலநாதா்)

உற்சவர் : நடராசர் (வடமொழியில் : கனகசபைநாதா்)

அம்மன்/அம்மை : உமையாம்பிகை, (வட மொழியில் : சிவகாமசுந்தரி) இத்தலத்தின் தலவிருட்சமாக தில்லை மரமும், தீர்த்தமாக சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தங்களும் உள்ளன. இத்தலமானது பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஆகாயத் தலமாகும். இத்தலம் திருநீலகண்ட நாயனார் அவதாரத் தலம் எனவும் கூறப்படுகின்றது.[1]

சிதம்பரம் திருமூலராலும், பதஞ்சலி மற்றும் வியாக்கியபாதர் எனும் முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது.


சிதம்பரம் திருமூலராலும், பதஞ்சலி மற்றும் வியாக்கியபாதர் எனும் முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது.[2]275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதல் முக்கிய இடம் வகிக்கும் தலம் இதுவே ஆகும்.


தல வரலாறு

தொகு

'கோயில்' என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை; கோயிலின் பெயர் சிதம்பரம், இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.

தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. (இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை; ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப்படுகின்றன.)

இக்கோயிலுள் 'திருமூலட்டானம்' என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்தசாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.

சிற்றம்பலம் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் - பஞ்சாக்கரப்படிகள் உள்ளன; இப்படிகளின் இரு புறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு சாஸ்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்தபோது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராசப்பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூல் 'திருக்களிற்றுப்டியார்' என்ற பெயர் பெற்றது.

இத்தலத்தில் நடனமாடும் சிவபெருமானைஆடலரசர், கனகசபைநாதர் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டாலும் நந்தனார் நாயனார் தான் நடனமாடும் நிலையை வைத்தே நடராசர் என்ற பெயர் வைத்தார் பின்பு அப்பெயரே அனைவராலும் அழைக்கப்படும் பெயராக மாறியது


தில்லை - தில்லை மரங்கள் இருந்த காட்டுப் பகுதி.

கோயில் - கோ என்றால் அரசன் அல்லது கடவுள். இல் என்றால் இருப்பிடம். இதுவே சிவபெருமானின் இருப்பிடம் என்பதைக் குறிக்கும் விதமாக சைவர்கள் இத்தலத்தை கோயில் என்றே அழைத்தனர்


பெரும்பற்றப்புலியூர்

தொகு

சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூஜை செய்ததால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். “சித்தம் - இதயம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித்தம் + அம்பரம் - சிதம்பரம். என்ற பெயரே காலப்போக்கில் அந்த ஊர் பெயர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக சிதம்பரம் என்று மாறிவிட்டது.[5] மேலும் சித்தம்பரம் கோயில் ஆனது இதயஸ்தலமாக இவ்வூலகிற்கே இவ்விடத்தில் இருந்து விளங்குவதாகவும் கருதப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்

தொகு

சிறு + அம்பலம் = சிற்றம்பலம். அம்பலம் என்றால் மேடை, இடம், பலர் கூடும் இடம் என்றுப் பொருள். இந்த அம்பலத்தின் மீது இறைவன் திருக்கூத்தாடாவதால் இது திருச்சிற்றம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இப்பெயரே பின்னாளில் சித்தம்பலம் என்று மருவி பின்னர் சித்தம்பரம் என்றாகி பின்னர் சிதம்பரம் என்றுச் சிதைந்துள்ளது.


பொன்னம்பலம்

தொகு

இங்கு நடராஜர் ஆடும் சிற்றம்பலத்துக்கு மற்றொரு பெயரே பொன்னம்பலமாகும் இது கனகசபை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சபைக்கு, முதலாம் பராந்தகன் சோழ மன்னன் பொற்கூரை வேய்தான் என்றுத் திருவாலங்காட்டு செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அதனால் இந்தச் சபை பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது; வடமொழியில் கனகசபை எனக் கூறப்படுகிறது.

பேரம்பலம்

தொகு

"பேரம்பலம்" இது தேவசபை எனப்படும். மணவில் கூத்தனான காளிங்கராயன் விக்கிரமசோழன் காலதில் இச்சபையைச் செம்பினால் வேய்ந்தான் என்று தில்லைக்கோயில் பாடலால் அறிவதோடு, பின்பு இப்பேரம்பலத்திற்கு பொன் வேய்ந்தவன் மூன்றாங்குலோத்துங்கச் சோழன் ஆவான்.


More.? …..












Kutralam chitira sabhai




குற்றாலம் சித்திரசபை கோவில்


சித்திர வடிவில் இறைவனை வழிபடும் ஒரே தலம்


குற்றாலம் சித்திர சபை, பாண்டிய நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்றான குற்றால நாதர் கோவிலுக்குப் அருகில் தனிக்கோவிலாக உள்ளது. குற்றாலத்தின் மெயினருவி போவதற்கான வளைவைத் தாண்டி, ஐந்தருவி போகும் வழியில், தேர் நிலைக்கு பக்கத்தில் அமைந்துள்ளது குற்றால சித்திர சபை.  சித்திரசபை பிரமிடுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை தாமிரத் தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.


நடராசப் பெருமான் திருத்தாண்டவம் ஆடியுள்ள ஐந்து சபைகளில் ஒன்றுதான் குற்றாலம் சித்திரசபை.


மற்ற நான்கு சபைகள்:


சிதம்பரம் நடராசர் கோவில் - கனகசபை 


திருவாலங்காடு வடாரண்யேசுவரர்  கோவில் - இரத்தினசபை


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் - வெள்ளிசபை


திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் - தாமிரசபை


பொதுவாக கோவில்களில் விக்கிரக வழிபாடுதான் பிரதானமாக இருக்கும். ஆனால் சித்திர வடிவில் இறைவனை வழிபடுவது உலகிலேயே குற்றாலம் சபையில்  மட்டும்தான்.  சித்திரசபையில் நடராஜப் பெருமான் தேவியுடன் ஓவியமாக எழுந்தருளியிருக்கிறார்.  பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம் இந்த சபையில் நடைபெற்றதாக திருப்பத்தூர் புராணம் கூறுகிறது. 


சித்திரசபையில் இறைவன் திருநடனம் புரியும் காட்சியைக் கண்டு பிரம்மதேவன் ஆதி சிவனின் சொரூபங்களைச் சுவரில் எழுதிவைத்தார். இதனால் வியாசர் முதலியோர் இதனைச் சித்திரசபை என்று அழைத்ததாக புராணங்கள் கூறுகிறது. தேவர்கள் தினமும் வந்து சித்திரசபையை தரிசித்து செல்கின்றனர் என்பது நம்பிக்கையாகும். நடராஜபெருமான், வடக்கே உள்ள திருவாலங்காட்டை விட்டு தெற்கே குற்றாலத்தை நோக்கி வந்தது இங்கு வீசும் தென்றல் காற்றில் இளைப்பாறவும், தீந்தமிழை அனுபவிக்கவும் என்று பரஞ்ஜோதி முனிவர் கூறுகியிருக்கிறார்.


சித்திரசபையின் உட்சுவற்றில்  மதுரை மீனாட்சி கல்யாண வைபவம், முருகரின் அவதாரங்கள், விநாயகர், துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், திருவிளையாடற்புராண வரலாறுகள், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகவான், ரதி - மன்மதன் ஆகியவை வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன.


நடராஜருக்கு வருடத்துக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில், மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் முக்கியமான திருவிழாக்கள். இதில் குறிப்பாக, ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள், நடராஜப் பெருமானுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனி மாதத்தில், எல்லா சிவாலயங்களிலும் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் உத்திர நட்சத்திர நாளில் நடைபெறும். இதுவே ஆனித் திருமஞ்சனம் என்று போற்றப்படும். 


மார்கழி மாதம் திருவாதிரை விழா இங்கு விமர்சையாக நடைபெறும். மார்கழி திருவாதிரை திருவிழாவின்போது முதலில் சித்திரசபையில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே, குற்றாலநாதர் கோவிலில் பூஜைகள் நடத்தப்படும்.

Amrithakadeeswarar Abhirami Temple

 

 

 

Amrithakadeeswarar Abhirami Temple (also called Abhirami temple is a Hindu temple dedicated to Shiva in his manifestation as Kalantaka and his wife Parvati as Abhirami.

There is a Shrine for Maha Vishnu as Amrithanarayana and his consort Mahalakshmi as Amrithavalli.

 It is located in Thirukkadaiyur (Thirukkadavur), 21 km East of Mayiladuthurai, Tamil Nadu  .

 This temple is associated with the legend of Shiva saving his young devotee, Markendeya from death, and the tale of a saint, Abirami Pattar a devotee of the presiding goddess. 

built during the Chola dynasty in the 9th century

Paadal Petra Sthalam. sambandar

Based on the legend of Markandeya, it is believed that worshiping at this temple will give longevity to couples who have reached age sixty or eighty-one

 

Kadaram konda choleswar

 

The Kadaram Konda Choleeswara Temple in Vellore district is known today as the Bhimeswara Temple near Kalavai.

 It was built by Rajendra I to commemorate his victory over Kadaram and various regions of present-day Malaysia.

 Rajendra I, who assumed the title Kadaram Kondan, was a prominent Chola ruler known for his military campaigns and temple construction.

 The temple is located in the Vellore district and is one of the significant historical sites linked to the Chola dynasty's expansion.


The temple's construction was part of a larger project initiated by Rajendra Chola following his conquests. He established a new capital city named Gangaikonda Cholapuram, where he built the temple and a large sacred tank called Cholagangam, into which the holy waters of the Ganges—brought by defeated kings—were mixed.

 The presiding deity of the temple is Bragadeeswarar (Shiva), represented by a massive Shiva Lingam that is the largest in size among all Shiva temples in Tamil Nadu, standing 13.5 feet tall with a circumference of 60 feet.

 This Lingam is made from a single piece of limestone and is placed 200 meters away from the sanctum sanctorum.


The temple's architecture reflects the grandeur of Chola dynasty craftsmanship. The Rajagopuram (main tower) is 180 feet tall with a base width of 100 feet, and its shadow does not fall on the ground, a unique feature attributed to the skill of the sculptors.

 The temple also houses a large Nandhi (bull) statue, which is bigger than the one at the Brihadeeswarar Temple in Thanjavur and is positioned on the ground, unlike the elevated Nandhi in Thanjavur.

 Sunlight falling on the Nandhi each day reflects onto the Lingam, allowing devotees to see the deity even when all lights are turned off, showcasing the exceptional architectural and sculptural expertise of the time.


The temple is dedicated to Lord Shiva and his consort, Periyanayaki, and is renowned for its unique features, including the Chandrakanta stone installed beneath the Lingam, which is said to regulate the temperature of the sanctum, keeping it cool in summer and warm in winter.

 The temple also houses a Navagraha shrine, where the nine planets are carved from a single stone on a lotus-shaped pedestal.

 Festivals celebrated at the temple include Maha Shivrathri, Aipasi Poornima, Panguni Utsav, and Margazhi Tiruvadhirai.


The temple's historical significance is further enhanced by its connection to Rajendra Chola's personal devotion. He used to spill the consecrated Ganga water from the well he dug in the temple onto his head before worshipping the Lord, a practice that reflects the deep spiritual and symbolic importance of the site.

 The temple remains a major pilgrimage destination and a testament to the Chola dynasty's military, architectural, and religious legacy.



Omkareswar

 


Omkareshwar temple
 in Khandwa
Fourth in line, Omkareshwar temple in Khandwa is one of the most revered places in India dedicated to Lord Shiva. Set on an island named Mandhata or Shivapuri by the Narmada River, the shape of the lingam here looks like ‘Om’. The place features two main Shiva Temples, one is Omkareshwar and the other is Amareshwar

,My Pr

More



.